பெற்றோல் விலைகள் நள்ளிரவு முதல் குறைகிறது

பெற்றோல் விலைகள் இன்று (01) நள்ளிரவு தொடக்கம் குறைக்கப்படுகிறது.
இதற்கமைய பெட்ரோல் 92இன் விலை லீட்டருக்கு 40 ரூபாயும், பெட்ரோல் 95இன் விலை லீட்டருக்கு 30 ரூபாயும் குறைக்கப்படும்.
இதன்படி பெட்ரோல் 92 ஒக்டெய்ன் – புதிய விலை லீட்டர்410 ரூபா. பெட்ரோல் 95 ஒக்டெய்ன் லீட்டர் 510 ரூபாவாகும்.
மற்றய எரிபொருள்களின் விலைகளில் எவ்வித மாற்றங்களும் இல்லை.
எரிபொருள் சூத்திரத்துக்கு அமைவாக மாதத்தின் 01ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் எரிபொருள் சூத்திரத்துக்கு அமைய விலைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.