அரசாங்கத்தைக் கவிழ்க்க ரகசிய சதித்திட்டம் நடந்தமை குறித்து, அரசியல்வாதிகளிடம் பொலிஸார் விசாரணை

🕔 September 29, 2022

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியிலிருந்து ராஜினாமா செய்ததையடுத்து, நாடாளுமன்றத்தை பலவந்தமாக ஆக்கிரமித்து புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பை தடுத்ததன் மூலம், அரசாங்கத்தை கவிழ்க்க சில அரசியல்வாதிகள் தொடர்புபட்டமை குறித்து பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த அரசியல்வாதிகள் – சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர்களின் நடவடிக்கைகள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் டெய்லி மிரர் குறிப்பிட்டுள்ளது.

கொழும்பில் உயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்திய கடந்த வார வர்த்தமானியில் மாற்றம் செய்யப்படும் என செய்திகள் வெளியாகியிருந்த போதிலும், உயர் பாதுகாப்பு வலயங்கள் ஏன் தேவைப்படுகின்றன என்றும், பட்டியலிடப்பட்டுள்ள பகுதிகள் எதற்காக இருக்க வேண்டும் என்பதற்கான நோக்கத்தையும் எதிர்வரும் நாட்களில் உச்ச நீதிமன்றத்துக்கு அரசாங்கம் தெரிவிக்கவுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷ வலுக்கட்டாயமாக வெளியேறியதைத் தொடர்ந்து, புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதைத் தடுப்பதற்காக, தம்மை எதிர்ப்பாளர்களாகக் காட்டிக் கொள்ளும் ஒரு குழுவினரால் இது நடந்துள்ளது.

இந்த குழு உச்ச நீதிமன்றத்தை முற்றுகையிடவும் திட்டமிட்டிருந்ததாக விசாரணை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்தத் தகவலின் அடிப்படையில்தான் – உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட பல முக்கிய பகுதிகளை உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்துவதற்கு பாதுகாப்பு அதிகாரிகள் பரிந்துரைத்திருந்தனர்.

இருந்தபோதிலும் இந்தச் செயல்பாட்டில் உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனை பெறப்படாததால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்போது உச்ச நீதிமன்றத்தைக் கலந்தாலோசித்து, தடையில்லா நிர்வாகத்தை உறுதி செய்வதற்காகவும் உச்ச பாதுகாப்பு வலயங்களை நிறுவுவது குறித்தும் ஆலோசனை பெறுவார்கள் என்று தெரியவருகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்