எச்சரிக்கை; மனித பாவனைக்கு தகுதியற்ற டின் மீன்கள் சந்தையில்: குறைந்த விலையில் கிடைப்பதாகவும் தகவல்

🕔 September 29, 2022

னித பாவனைக்கு தகுதியற்ற டின் மீன்கள் – சட்டவிரோதமான முறையில் சந்தைக்கு விடப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகிறது.

இந்த டின் மீன்கள் 2021ஆம் ஆண்டு 82 கொள்கலன்களில் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், அவை மனித பாவனைக்கு உகந்ததல்ல என்பதால் சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

மேற்படி டின் மீன்களே தற்போது சட்டவிரோதமாக சந்தைக்கு விடப்பட்டுள்ளது.

மேற்படி 82 கொள்கலன்களிலும் சுமார் 3.5 மில்லியன் டின்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

டின்களில் அடைக்கப்பட்ட மீன்களின் மாதிரிகளில் ஆர்சனிக் கலந்திருப்பது கண்டறியப்பட்டதாகவும், பின்னர் அவற்றை அழிக்கும் நோக்கத்தில் அவை சுங்கத் திணைக்களத்தில் வைக்கப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த டின் மீன்கள் கொழும்பு – பெட்டா மொத்த சந்தைக்கு கடத்தப்பட்டதாகவும், அவற்றின் காலவதித் திகதிகள் மாற்றப்பட்டு, புதிய லேபிள்களை ஒட்டி, நாடு முழுவதும் அவை விநியோகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

425 கிராம் எடை கொண்ட டின் மீன் ஒன்று தற்போது சந்தையில் 750 ரூபாவுக்கு விற்கப்படுகிறது, ஆனால் ஆர்சனிக் கலந்ததாகக் கூறப்படும் டின் மீன் ஒன்று சில்லறை விலையாக 550 ரூபாவுக்கு விற்கப்படுகிறது.

2021ஆம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட இந்த அசுத்தமான டின் மீனின் விலை அப்போது ரூ.350 முதல் ரூ.400 வரை இருந்ததாக கூறப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்