கொள்ளை முயற்சியுடன் தொடர்புபட்ட பிரதேச சபை உறுப்பினரின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்தத் தீர்மானம்

🕔 September 28, 2022

ங்கிக்குக் கொண்டுவரப்பட்ட பணத்தை கொள்ளையிட முயற்சித்த நடவடிக்கையுடன் சம்பந்தப்பட்ட தம்புத்தேகம பிரதேச சபை உறுப்பினரின் கட்சி உறுப்புரிமையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இடைநிறுத்தியுள்ளது.

தம்புத்தேகமவில் உள்ள தனியார் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக கொண்டுவரப்பட்ட 2 கோடி 23 லட்சம் ரூபாயை அண்மையில் இரண்டு பேர் கொள்ளையிட முயற்சித்தனர். இதன்போது அந்த இடத்தில் நின்றிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரினால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டதோடு, கொள்ளையர்கள் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், சந்தேக நபர்களுக்கு மோட்டார் சைக்கிளை வழங்கி கொள்ளைக்கு உதவிய தம்புத்தேகம பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து இந்தக் கொள்ளை முயற்சி சம்பவத்துடன் தொடர்புபட்டார் எனும் அடிப்படையில், பொதுஜன பெரமுன உறுப்பினரின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்