உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அறிவித்தல் தொடர்பில், ஆணையாளர் தகவல்

🕔 September 28, 2022
Person voting

ள்ளூராட்சித் தேர்தல் திகதி குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு அடுத்த வருட ஆரம்பத்தில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

தற்போது வாக்காளர் டாப்பை புதுப்பிக்கும் பணியில் ஆணைக்குழு ஈடுபட்டுள்ளதாகவும், நொவம்பர் நடுப்பகுதிக்குள் அதனை நிறைவு செய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“வாக்காளர் பட்டியலை பூர்த்தி செய்து நொவம்பர் நடுப்பகுதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு” என்றும் அவர் கூறியுள்ளார்.

வாக்காளர் டாப்பு புதுப்பிக்கப்பட்ட பிறகு, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஆணைக்குழு விரைவில் நடத்துமா என கேட்கப்பட்டபோது; “உள்ளூராட்சி மன்றத் தேர்தல்2023 மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் நடத்த வேண்டும் என்பது எங்கள் எதிர்பார்ப்பு. ஆனால் திகதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை” என்றார்.

“வாக்காளர் டாப்பை புதுப்பித்த பிறகு விரைவில் தேர்தலை நடத்த முடியாது. க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மற்றும் உயர் தரப் பரீட்சைகள் வாக்குச் சாவடிகளாக உள்ள பாடசாலைகளில் நடத்தப்படுகின்றன. எனவே, விரைவில் தேர்தலை நடத்த முடியாது” எனவும் அவர் தெரிவித்தார்.

Comments