ஜப்பான், பிலிபைன்ஸ் பயணம்: நாட்டிலிருந்து ஜனாதிபதி புறப்பட்டார்

🕔 September 26, 2022

ப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (26) அதிகாலை நாட்டை விட்டு புறப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜப்பானிய முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி கலந்து கொள்வார் என்றும், பிலிப்பைன்ஸ் செல்வதற்கு முன்னதாக ஜப்பானிய பிரதமர் மற்றும் பல அமைச்சர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் ஊடக் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணத்தின் போது, ​​ஜனாதிபதியின் வசமுள்ள அமைச்சுக்களின் ராஜாங்க அமைச்சர்கள், அவர்களின் செயற்பாடுகளை மேற்பார்வையிடுவதற்கு பதில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, ராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார பதில் பாதுகாப்பு அமைச்சராகவும், ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நிதி, பொருளாதார மற்றும் தேசிய கொள்கை பதில் அமைச்சராகவும், ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராகவும், ராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தொழில்நுட்பத்துறை அமைச்சராகவும், ராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவால், பெண்கள், குழந்தைகள் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் பதில் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்