கடலில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த மாணவர்களின் உடல்கள் மருதமுனையில் நல்லடக்கம்

🕔 May 12, 2022

– பாறுக் ஷிஹான் –

ருதமுனை கடற்பகுதியில் குளித்த போது காணாமல் போன இரண்டு மாணவர்களும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டு, உடல்கள் மருதமுனையில் நேற்றிரவு நல்லடக்கம் செய்யப்பட்டன.

கடலலையில் சிக்கி  இழுத்து செல்லபட்டு காணாமல்போன இரு  மாணவர்களும் நேற்று சடலங்களாக மீட்கப்பட்டு, மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் உடல்கள் கையளிக்கப்பட்டன.

செவ்வாய்க்கிழமை (10) மாலை 5.30 மணியளவில் மருதமுனை கடற்கரைப் பகுதியில் குளித்த மூன்று மாணவர்கள் அலையில் இழுத்துச் செல்லப்பட்டனர்.

இவர்களில் ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அன்றைய தினம்  அனுமதிக்கப்பட்டார்.

அதேவேளை ஏனைய இரு மாணவர்களும் சடலங்களாக மறுநாள்  புதன்கிழமை (11) மாலை மீட்கப்பட்டனர்.

குறித்த சம்பவத்தில் மருதமுனை  அல்மனார் தேசிய பாடசாலை மாணவர்களான முகமது பைரூஸ் வசீம் ஜெசீத் மற்றும் உபைத்துல்லாஹ் அத்தீஸ் அகமட் ஆகியோரே உயிரிழந்தனர்.

தொடர்பான செய்தி: கடலில் குளித்த மாணவர்கள் இருவர் மாயம்: மருதமுனைப் பகுதியில் சோகம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்