புதிய பிரதமருடன் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி இணக்கம்

🕔 April 29, 2022

டைக்கால அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார்.

புதிய பிரதமர் மற்றும் புதிய அமைச்சரவையினையும் இதன்போது நியமிப்பதற்கு அவர் சம்மதித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான  மைத்திரிபால சிறிசேன இதனைத் இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

அதற்கமைய, நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கியதாக புதிய அமைச்சரவையுடன் கூடிய புதிய அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி இணங்கியுள்ளதாக மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

தொடர்பான செய்தி: ஜனாதிபதியுடனான சந்திப்பில், 108 ஆளுந்தரப்பு எம்.பிக்கள் மட்டுமே பங்கேற்பு: பிரதமர் பதவி விலக வேண்டுமென கடிதம் எழுதிய டலஸ் பல்டி

Comments

புதிது பேஸ்புக் பக்கம்