ஜனாதிபதியுடனான சந்திப்பில், 108 ஆளுந்தரப்பு எம்.பிக்கள் மட்டுமே பங்கேற்பு: பிரதமர் பதவி விலக வேண்டுமென கடிதம் எழுதிய டலஸ் பல்டி

🕔 April 29, 2022

னாதிபதி மற்றும் பிரதமருக்கு ஆகியோர் தங்கள் பதவிகளைத் தொடர வேண்டுமென ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி கோத்தாபயா ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கிடையில்ட நேற்று (28) மாலை நடைபெற்ற சந்தப்பில், 117 எம்.பிக்கள் மஹிந்த ராஜபக்ஷாவுக்கு ஆதரவளித்துள்ளனர் எனத் தெரியவருகிறது.

ஆதரவு வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களில் 109 பேர் சந்திப்பில் கலந்து கொண்ட போதும், ஏனைய 08 பேர் தவிர்க்க முடியாமை காரணமாக கூட்டத்தில் கொள்ள முடியவில்லை எனக் கூறியுள்ளனர்.

இதேவேளை சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தங்கள் ஆதரவை வழங்குவதாக உறுதியளித்ததோடு, தற்போதைய நெருக்கடி மற்றும் முன்னோக்கி செல்லும் வழிகள் குறித்தும் விவாதித்துள்ளனர்.

பிரதமரும் அமைச்சரவையும் ராஜிநாமா செய்ய வேண்டுமென்றும், கூட்டணி அரசாங்கத்தை அமைக்க வெண்டும் எனவும் தெரிவித்து சமீபத்தில் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய முன்னாள் அமைச்சர் டலஸ் அலகபெருமவும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டதோடு, ஜனாதிபதியும் பிரதமரும் பதவிகளில் தொடர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் எந்தத் தரப்பும் அரசாங்கத்தை அமைப்பதற்கு அனுமதிப்பேன் என்று ஜனாதிபதி இதன்போது கூறியிருந்தார். மேலும் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் இருந்து விலகும்படி தான் கேட்கவில்லை என்றும், பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியைத் தொடரலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்