
சர்வதேச நாணய நிதியத்தை முன்னதாகவே இலங்கை நாடியிருக்க வேண்டும் என்று தான் நம்புவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை நியமனத்தின் பின்னர் நிகழ்த்திய விசேட உரையில் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
அத்துடன், விவசாயிகளுக்கு ரசாயன உரம் வழங்காதது தவறு என்றும், அரசாங்கம் மீண்டும் ரசாயன உரங்களை வழங்கும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய உரையிலும், ரசாயன உரம் தடை செய்யப்பட்டமை தவறு என்பதை ஏற்றுக் கொண்டிருந்தார்.
புதிய அமைச்சரவையில் ஜனாதிபதி ஆற்றிய உரை இன்று (18) இரவு 7.30 மணிக்கு அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலிகளிலும் ஒளிபரப்பப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



