
மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம், தனது பதவிக்காலம் முடிவடையும் வரை, ஜனாதிபதியாக இருக்கப் போவதாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மாளிகையில் இன்று (16) மாலை, முன்னாள் அமைச்சர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
“புதிய ஆட்சியை அமைக்க எதிர்க்கட்சியினருக்கு அழைப்பு விடுத்திருந்தேன். எனினும், எதிர்க்கட்சியினர் முன்வராதமையினாலேயே, புதிய அமைச்சரவையை நியமிக்கத் தீர்மானித்துள்ளேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர்களுடன் ஜனாதிபதி தலைமையில் நேற்று மாலை இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலில் பின்னர் அவர் இதனைக் கூறியுள்ளார்.
தொடர்பான செய்தி: புதிய அமைச்சரவை நாளை பதவியேற்பு; ராஜபக்ஷகள் எவரும் இல்லை: கோட்டா தலைமையில் தீர்மானம்



