
புதிய அமைச்சரவை நாளை (17) மாலை நியமிக்கப்படவுள்ள நிலையில், அதில் ராஜபக்ஷக்கள் எவரும் பதவிகளை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (16) மாலை இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலில் இந்த முடிவு எட்டப்பட்டதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன்படி நாளை மாலை புதிய அமைச்சரவை பதவியேற்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இந்த அரசாங்கத்தை தொடர்ந்தும் கொண்டு செல்லும் நோக்கில் அமைச்சர் பொறுப்புகளை ஏற்காதிருப்பதற்கு முன்னாள் அமைச்சர்கள் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதியிடம் அறிவித்துள்ளனர்.
இதேவேளை, புதிய அமைச்சரவையில் ராஜபக்சர்கள் எவரும் அமைச்சர் பதவிகளை ஏற்காதிருப்பதற்கும் தீர்மானம் எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது



