தலைப்புச் செய்திகள்

“ஏற்கப் போவதில்லை”; பதவியை நிராகரித்து, ஜனாதிபதிக்கு பந்துல குணவர்த்தன கடிதம்

அடுத்த சில தினங்களில் நியமிக்கப்படவுள்ள அமைச்சரவையில் தான் அமைச்சு பதவியை பெற்றுக்கொள்ள போவதில்லை என, முன்னாள் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.

ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்ப்பதற்காக, இளையவர்கள் அடங்கிய அமைச்சரவை நியமிக்குமாறும், அவர்களுக்கு இடமளிக்கும் வகையில் – தான் அமைச்சரவையின் பொறுப்புகளை ஏற்க போவதில்லை எனவும் பந்துல குணவர்தன, ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குறுகிய காலத்துக்கு 15 பேர் கொண்ட அமைச்சரவையை நியமிக்குமாறும் நெருக்கடி தீர்ந்த பின்னர், அமைச்சரவைக்கு மேலும் சிலரை நியமிக்க முடியும் எனவும் பந்துல குணவர்த்தன தனது கடிதத்தில் யோசனை முன்வைத்துள்ளார்.

அத்துடன் குறுகிய காலத்தில் செய்ய வேண்டிய மாற்றங்கள் தொடர்பான யோசனைகளையும், ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் முன் வைத்துள்ளார்.