
ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் எந்தவொரு பொது வீதி, பூங்கா, மைதானங்கள், புகையிரத வீதிகள் மற்றும் கடற்பரப்புக்கள் போன்ற பொது இடங்களில் மக்கள் நடமாடுவதைத் தடை செய்யும் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும், பாதுகாப்பு அமைச்சு அல்லது பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்கள், பொலிஸ் மா அதிபர் அல்லது வேறு ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளால் எழுத்துபூர்வமாக அனுமதி பெற்றவர்களுக்கு விதிவிலக்குகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று மாலை 6.00 மணி முதல் திங்கட்கிழமை காலை 6.00 மணி வரையில் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



