பொதுஜன பெரமுன எம்.பியுடன் வந்த குழுவினர், ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகம் மீது முட்டைத் தாக்குதல்

🕔 March 7, 2022

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் குழுவொன்று புறக்கோட்டையில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்துக்கு முன்பாக இன்று (07) காலை ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.

இதன்போது அலுவலகத்தின் மீது முட்டைகளை வீசிப்பட்டுள்ளன.

கோட்டே முன்னாள் மேயரும் தற்போதைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினருமான மதுர விதானகே இந்த குழுவுடன் வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த குழுவில் பல பிரபல பாதாள உலக குழுவினரும் இருந்ததாக ஐக்கிய மக்கள் சக்தியினர் தெரிவித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்; “கடந்த அரசாங்கத்தின் ஆட்சியின் போது மக்களுக்கு என்ன செய்தீர்கள்” என கேள்வி எழுப்பின.

அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் மீது தாம் கொண்டு வந்த பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் வைத்துச் சென்றனர்.

Comments