‘வெட கரண அபே விருவா’ பாடலை தவறாகப் பயன்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கையா: என்ன சொல்கிறது பொலிஸ்

🕔 March 6, 2022

‘வெட கரண அபே விருவா’ பாடலை தவறாக பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை பொலிஸ் தரப்பு மறுத்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

‘வெட கரண அபே விருவா’ பாடலை தவறாக பயன்படுத்துவோர் மீது குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) நடவடிக்கை எடுத்து வருவதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஜனாதிபதித் தேர்தல் பாடலை எரிவாயுக்கான வரிசைகளிலும், சமீபகாலமாக எரிபொருள் வரிசைகளிலும் மக்கள் பாடுகின்ற ஒரு போக்கு இருந்து வருகின்றது.

இந்த நிலையில் ‘வெட கரண அபே விருவா’ பாடலை தவறாகப் பயன்படுத்தி ஜனாதிபதியை அவமதிக்கும் நோக்கத்தில் செயற்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை பொலிஸார் மறுத்துள்ளனர் என, அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments