வீரகேசரியின் நக்குண்ணித்தனம்: ‘பீ’ துடைப்பதற்கும், முஸ்லிம் சமூகம் பயன்படுத்தக் கூடாத பத்திரிகை

🕔 February 3, 2022

– மரைக்கார் –

திருகோணமலை ஷண்முகா இந்து மத்திய கல்லூரியில் நேற்று (02) நடந்த சம்பவம் என்ன என்று எல்லோருக்கும் தெரியும். அங்கு கடமையாற்றிய ஆசிரியை ஒருவர், ஹபாயா அணியக் கூடாது என்கிற அந்தப் பாடசாலை நிர்வாகத்தின் முடிவை எதிர்த்து, தனது ஆடைக்கான உரிமைப் போரட்டத்தில் நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்றுக் கொண்டு, மீண்டும் அந்தப் பாடசாலைக்குச் சென்ற போது, அவர் மரியாதைக் குறைவாக நடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டு, தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த விவகாரத்தில் நீதியும், நியாயமும் – பாதிக்கப்பட்ட ஆசிரியை பஹ்மிதாவின் பக்கம் உள்ளது என்பதை எல்லோரும் அறிவர். சிலர் அதனை வெளிப்படையாகச் சொல்கிறார்கள், சிலர் மௌனமாக ஏற்றுக் கொண்டுள்ளனர், சிலர் இனவாதத்தோடு சிந்தித்து, நியாயத்தை தமக்குள் புதைத்துள்ளனர்.

ஓர் அரச பாடசாலையில் எந்தவொரு சமூகமும் தமது கலாசாரத்தைப் தூக்கிப் பிடிக்க முடியாது. அரச பாடசாலையொன்றில் அரசியலமைப்பு மற்றும் கல்வியமைச்சின் சுற்றுநிருபம் ஆகியவற்றின்படியே நடக்க வேண்டும் என்பதை ஷண்முகாவின் நிர்வாகம் அறியாமலில்லை.

இவை இப்படியிருக்க நேற்றைய விவகாரத்தை சில முக்கிய ஊடகங்கள் மிகவும் பக்கச்சார்பாகவும், இனவாதத்துடனும் செய்தியாக்கியுள்ளன. அவற்றில் வீரகேசரி பத்திரிகை மிகவும் அல்பத்தனத்துடன் நடந்துள்ளது.

ஷண்முகாவில் நேற்று ஆசிரியை பஹ்மிதா தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமையால், பதிலுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாத அந்தப் பாடசாலையின் அதிபரும் வைத்தியசாலையில் அனுமதி பெற்றுள்ளார் என்பது, வெளியாகியுள்ள வீடியோக்களின் மூலம் அம்பலமாகியுள்ளது.

இதை வைத்து இன்றைய (03) வீரகேசரிப் பத்திரிகை; ‘திருமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் அதிபர் மீது தாக்குதல். ஆசிரியர், மாணவியர், பெற்றோர் எதிர்ப்புப் போராட்டம்; பொலிஸிலும் முறைப்பாடு’ என தலைப்பிட்டுள்ளது. இது வீரகேசரியின் நக்குண்ணித்தனத்துக்கு மற்றொரு உதாரணமாகும்.

வீரகேசரி – தமிழ் முதலாளிமார்களால் நடத்தப்படும் பத்திரிகை என்றாலும் கூட, அதன் வாசகர்களில் கிட்டத்தட்ட அரைவாசித் தொகையினர் முஸ்லிம்களாவர். ஆனால், முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலையுடன்தான் இப்படியான சந்தர்ப்பங்களில் வீரகேசரி செய்திகளை வெளியிடுகின்றமை வழமையாகும்.

யுத்த காலத்தில் புலிகளால் முஸ்லிம்கள் கொல்லப்பட்ட போதெல்லாம், ‘அடையாளம் தெரியாதோர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்’ அந்த மரணம் நடந்ததாகவே வீரகேசரி சொல்லியது.

முஸ்லிம் – தமிழ் சமூகங்களுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்பட்ட போதெல்லாம் உண்மையை நேர்மையாகச் சொல்லாமல், பொய்யை இனவாதத்துடன் செய்தியாக வீரகேசரி வெளியிட்டமைக்கு பல உதாரணங்களைக் குறிப்பிடலாம்.

இப்படி முஸ்லிம் விரோத மனநிலையுடன் செய்திகளை நியாயமற்று எழுதிவருகின்ற வீரகேசரியை முஸ்லிம்களும், நியாயத்தின் பக்கமுள்ள தமிழ்பேசும் மக்களும் முற்றுமுழுதாக புறக்கணிக்க வேண்டும்.

அதிலும் முஸ்லிம் சமூகம் வீரகேசரியை ‘பீ’ துடைப்பதற்குக் கூட பயன்படுத்தக் கூடாது.

பத்திரிகை விற்பனையாளர்களாகவுள்ள முஸ்லிம்களும், முஸ்லிம் வாசகர்களும் வீரகேசரியைப் புறக்கணித்தே ஆக வேண்டும். ஒரு பத்திரிகை இயங்குவது அதன் விற்பனை மற்றும் விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தினாலாகும். எனவே, தமது விரலைக் கொண்டு தமது கண்களைக் குத்துவது போன்று, முஸ்லிம்கள் வீரகேசரி பத்திரிகையை வாங்கியும், வீரகேசரிக்கு விளம்பரங்களைக் கொடுத்தும், தமது இனத்துக்கு எதிராக பொய்யான செய்திகளை வெளியிடும் வீரகேசரியை பொருளாதார ரீதியில் வளர்த்து விடுதல் கூடாது.

வீரகேசரி மட்டுமல்ல, அதன் நிருவாகத்தின் கீழ்தான் ‘தினக்குரல்’ பத்திரிகையும் உள்ளது. முஸ்லிம்களின் தலையைத் தடவி கண்களைப் பிடுங்குவதைப் போல், ‘விடிவெள்ளி’ எனும் பெயரில் வீரிகேசரி நிறுவனம் முஸ்லிம்களுக்கென்று கூறி, ஒரு பத்திரிகையை வெளியிடுகிறது. இந்தப் பத்திரிகையினையும் முஸ்லிம்கள் புறக்கணித்தே ஆக வேண்டும்.

இதையெல்லாம் படித்த பிறகும், நாங்கள் வீரகேசரியை விற்போம், வாங்குவோம், அதற்கு விளம்பரங்களைக் கொடுப்போம் என்று முஸ்லிம் சமூகம் இனியும் நடந்து கொண்டால், செருப்பில் மலத்தைத் தொட்டு முஸ்லிம் சமூகத்தின் முகத்தில் அடிப்பது போல், வரும் காலங்களிலும் வீரகேசரி செய்திகளை வெளியிடத்தான் போகிறது. அப்போது சர்வத்தையும் பொத்திக் கொண்டிருப்பதற்கு முஸ்லிம் சமூகம் இப்போதே பழகிக் கொள்தல் வேண்டும்.

தொடர்பான செய்தி: ஹபாயாவுடன் சென்ற ஆசிரியை மீது தாக்குதல்; வைத்தியசாலையில் அனுமதி: திருகோணமலை ஷண்முகாவில் முடிவுக்கு வராத கலாசாரப் பயங்கரவாதம்

Comments