சுதந்திர தின விழாவைப் புறக்கணிக்க, பேராயர் மெல்கம் ரஞ்சித் தீர்மானம்: காரணமும் வெளியிடப்பட்டது

🕔 February 3, 2022

நாட்டின் 74ஆவது சுதந்திர தினம் நாளை (04) கொண்டாடப்பபடவுள்ள நிலையில், சுதந்திர தின விழாவை புறக்கணிக்க கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் தீர்மானித்துள்ளார்.

சுதந்திர தினத்தில் வழமையாக மேற்கொள்ளும் செயற்பாடுகளை ரத்துச் செய்வதற்கு பேராயர் மெல்கம் ரஞ்சித் தீர்மானித்துள்ளார் என, கொழும்பு மறைமாவட்ட தொடர்பாடல் பிரிவின் உறுப்பினர் அருட்தந்தை கர்தினால் சிறில் காமினி பெனாண்டோ இன்று (03) ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம் மற்றும் ஈஸ்டர் தின தாக்குதல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் காணப்படும் குறைபாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அருட்தந்தை பெனாண்டோ மேலும் கூறியுள்ளார்.

“ஓல் செயிண்ட்ஸ் தேவாலய கைக் குண்டு விவகாரத்தில், தேவாலய பராமரிப்பாளருக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று நிரூபிக்கப்பட்டும், அவர் ஏன் தொடர்ந்தும் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். இந்த நபருக்கும் கைக் குண்டு விவகாரத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை சிசிரிவி கமரா காட்சிகள் தெளிவுபடுத்தியுள்ளன”. எனவும் பெனாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில், தேவாலயத்தின் பராமரிப்பாளர் தவிர்ந்த மற்றைய சந்தேக நபர்கள் அனைவரும் பொரிஸ் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்