பிணை கோரி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க திகதி குறிப்பு

🕔 January 18, 2022

பிணையில் தன்னை விடுவிக்க உத்தரவிடுமாறு கோரி சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட திருத்தப்பட்ட மனுவை ஜனவரி 20 ஆம் திகதிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இன்று (18) இவ்வாறு திகதி குறித்தது.

தனக்கு பிணை வழங்க மறுத்து புத்தளம் மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய உத்தரவிடுமாறு, குறித்த மனுவில் ஹிஸ்புல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் மேனகா விஜேசுந்தர மற்றும் நீதியரசர் நீல் இத்தவல ஆகிய இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த மறுசீரமைப்பு மனுவை ஜனவரி 20 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானித்துள்ளது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கை (ICCPR) சட்டத்தின் கீழ், ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிகையின் படி, ஹிஸ்புல்லா மேற்படி சட்டங்களுக்கு முரணாக மாணவர்களிடம் சில அறிக்கைகளை வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஏப்ரல் 2020 இல் கைது செய்யப்பட்ட ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, 18 மாத காலமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்