முஜிபுர் ரஹ்மான் மீது, நாடாளுமன்றத்தில்தாக்குதல்

🕔 December 11, 2015

Mujibur rahman - 0123
க்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மீது, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள்  தாக்குதல் நடத்தியதால், இன்று வெள்ளிக்கிழமை சபையில் அமளிதுமளி ஏற்பட்டது.

பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் மரணம் தொடர்பில் முஜிபுர் ரஹ்மான் கருத்துத் தெரிவித்த போதே, இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

“ரக்பி வீரர் வசீம் தாஜுடீனின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக கநபர்கள், இந்த சபையில் அமர்ந்திருக்கின்றனர்” என்று,  நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹ்மான் தனது உரையில் குறிப்பிட்டார்.

இதன்போதே சபையில் பிரச்சினை ஏற்பட்டது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிசாந்த மற்றும்  இந்திக அனுருத்த ஆகியோரே, முஜிபுர் ரஹ்மான் மீது இத்தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

வசீம் தாஜுதீன் கொலை தொடர்பில் முஜிபுர் ரஹ்மான் உரையாற்றும் போது இடைமறித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், “நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணைகள் நடாத்தப்பட்டு வருகின்ற சம்பவம் தொடர்பில் சபையில் உரை நிகழ்த்த கூடாது” என கூச்சலிட்டுள்ளனர்.

எனினும், இந்த சம்பவம் தொடர்பில் சபையில் கருத்து தெரிவிப்பதற்கு அதிகாரம் உள்ளதாக, பிரதி அமைச்சர் சுஜிவ சேனசிங்க இதன்போது கூறினார்.

இச்சம்பவத்தை அடுத்து பாராளுமன்றம் சில நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சபை அமர்வுகள் மீண்டும் ஆரம்பமாகிய நிலையில் மீண்டும் முஜிபுர் ரஹ்மானுக்கு உரையாற்ற சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்