ஒரு பில்லியன் அமெரிக்க டொலரில் கண்டி அபிவிருத்தி; செயல் திட்டத்தை தயாரிக்குமாறு, அமைச்சர் ஹக்கீம் உத்தரவு

🕔 December 11, 2015

Hakeem - 075
– ஜெம்சாத் இக்பால் –

ப்பான் வழங்கும் ஒரு பில்லியன் டொலர் பாரிய நிதியுதவியுடன் கண்டி நகரை அபிவிருத்தி செய்வதற்கு முழுமையான செயல்திட்டமொன்றை துரிதமாகத் தயாரிக்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீழ்வழங்கல் மற்றும் நகர திட்டமிடல் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் உயரதிகாரிகளுக்கு இன்று வெள்ளிக்கிழமை பணிப்புரை விடுத்தார்.

மேற்படி நிதியுதவியை வழங்க முன்வந்துள்ள ஜப்பானிய உயர்மட்டக்குழு எதிர்வரும் ஜனவரி 12ஆம் திகதி இலங்கை வரவுள்ளதால், அதற்கு முன்னர் உரிய செயல்திட்டத்தை தயாரித்து முடிக்குமாறும் அமைச்சர் ஹக்கீம் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சில் இன்று வெள்ளிக்கிழமை கண்டி நகர அபிவிருத்தி தொடர்பாக, பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் நடைபெற்ற முக்கிய கலந்துரையாடலின்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

கண்டி நரை அபிவிருத்தி செய்வது தொடர்பாக, நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் அமைச்சர் ஹக்கீம் அண்மையில் ஏற்பாடு செய்திருந்த, ஆரம்பக் கலந்துரையாடலைத் தொடர்ந்து, இன்றைய கலந்துரையாடல் அமைச்சில் நடைபெற்றது.

கண்டி நகர போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கான வழிவகைகள், மாற்று வீதிகளை அமைத்தல், யுனொஸ்கோவினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மரபுரிமை நகரான கண்டியில் வசதி குறைந்த சேரி வாழ் மக்களுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளல் மற்றும் கலையம்சம் பொருந்திய தபால் நிலையக் கட்டடத்தை சம்பந்தப்பட்ட அமைச்சரின் ஒத்துழைப்புடன் நவீன மயப்படுத்தல் போன்ற பல்வேறு விடயங்கள் இக்கலந்துரையாடலின் போது ஆராயப்பட்டன.

அமைச்சின் செயலாளர் பீ.எம்.யூ.டீ. பஸ்நாயக்க, செயல்திட்ட செயலாளர் என்.டீ. ஹெட்டிஆராச்சி மற்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, விவசாயத் திணைக்களம் மற்றும் கண்டி மாநகர சபை ஆகியவற்றின் உயரதிகாரிகள் உட்பட பலர் இன்றை கலந்துரையாடலில் பங்குபற்றினர்.Hakeem - 076

Comments

புதிது பேஸ்புக் பக்கம்