ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றவர்களை தடுத்து நிறுத்திய பொலிஸார்: ஏற்பாட்டாளர்கள் வாக்குவாதம்

🕔 November 16, 2021

க்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றவர்களை பொலிஸார் தடுத்ததையடுத்து, நாட்டின் பல பகுதிகளில் பதற்றமான சூழ்நிலைகள் பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.

எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று (16) பிற்பகல் 02 மணி முதல் கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் பேரணி ஒன்றையும் அதன் பின்னர் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றையும் ஏற்பாடு செய்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளர் ரெஹான் ஜெயவிக்ரம, தனது ஆதரவாளர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளும் பொருட்டு பயணித்த பஸ் ஒன்று, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நுழைய விடாமல் தடுத்தப்பட்ட போது, பொலிஸாருடன் அவர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இது தொடர்பான வீடியோவை நியூஸ் பெஸ்ற் வெளியிட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் மேற்படி ஆர்ப்பாட்டத்துக்கு – பொலிஸ் நிலையங்கள் நீதிமன்றில் தடை கோரிய போதிலும், அதிகமான நீதிமன்றங்கள் அந்தக் கோரிக்கைகளை நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்