சீனத் தூதரகத்தின் கறுப்புப் பட்டியலில் மக்கள் வங்கி சேர்க்கப்பட்டமை நிதியமைச்சருக்குத் தெரியாதாம்: அவரே கூறியுள்ளார்

🕔 October 30, 2021

க்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் இலங்கையிலுள்ள சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக அலுவலகம் சேர்த்துள்ளதாக தமக்கு அறிவிக்கப்படவில்லை என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று (30) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

சீனத் தூதரகத்தினால் மக்கள் வங்கி கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளமை அமைச்சருக்குத் தெரியுமா என வினவியபோது, ​​அவ்வாறானதொரு நிகழ்வு குறித்து தனக்கு அறிவிக்கப்படவில்லை என அமைச்சர் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

கடனுதவி மற்றும் இரு தரப்பினருக்கு இடையிலான ஒப்பந்தங்களின்படி பணம் செலுத்தத் தவறியதற்காக இலங்கையில் உள்ள சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக அலுவலகத்தால், இலங்கை மக்கள் வங்கி நேற்று (29) கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

இந்த முடிவு சீனாவின் வர்த்தக அமைச்சுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்பான செய்தி: மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் சேர்த்தது சீனத் தூதரகம்: பதிலளித்தது மக்கள் வங்கி

Comments

புதிது பேஸ்புக் பக்கம்