அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிராக பேராயர் மெல்கம் ரஞ்சித் மற்றும் எல்லே குணவன்ச தேரர் இணைந்து, அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

🕔 October 18, 2021

கெரவலபிட்டிய – யுகதனவி மின்நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்காவின் நிவ்போர்ட் நிறுவனத்துக்கு வழங்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்துக்கு எதிராக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் மற்றும் எல்லே குணவன்ச தேரர் ஆகியோர் ஒன்றினைந்து உச்ச நீதிமன்றில் இன்று (18) அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்துள்ளார்கள்.

அந்த அடிப்படை உரிமை மீறல் மனுவில், அமெரிக்காவின் நிவ்போர்ட் நிறுவனத்துக்கு இயற்கை திரவ வாயு விநியோக ஒப்பந்தத்தை தடை செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவை உறுப்பினர்கள், அமைச்சரவையின் செயலாளர், நிதியமைச்சின் செயலாளர் மற்றும் சட்டமாதிபர் உள்ளிட்ட 54 பேர் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் என அந்த மனுவில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த மனுவில் பொறுப்பு கூற வேண்டிய தரப்பினராக அமெரிக்காவின் நிவ்போர்ட் நிறுவனத்தின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்