முட்டை விலையும் அதிகரிக்கும்: உற்பத்தியாளர் சங்கம் தெரிவிப்பு

🕔 October 19, 2021

ற்பத்தி விலையை குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், கோழி முட்டை விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதும் கூட 22 ரூபாவுக்கு நுகர்வோருக்கு முட்டை வழங்கப்படுவதாகவும், இந்த விலை தொடர்ந்து அதிகரிக்கலாம் எனவும் சங்கம் கூறியுள்ளது.

குளியாபிட்டிய பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது குறித்த சங்கத்தின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக சமையல் எரிவாயு, கோதுமை மா, பால் மா ஆகியவற்றின் விலையேற்றங்கள் காரணமாக அதனுடன் தொடர்புடைய பல பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்