60 சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக நீதியமைச்சர் தெரிவிப்பு

🕔 October 14, 2021

நீதியமைச்சு, கடந்த 20 ஆண்டுகளில் திருத்தப்படாத 60 சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

முன்மொழியப்பட்ட திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சிறைச்சாலைகள் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு அமைச்சில் நேற்று (13) நடைபெற்ற சந்திப்பொன்றின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் செயல்படுத்த திட்டமிட்டுள்ள முற்போக்கான சட்ட அமைப்பில் அவற்றினைச் சேர்க்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முன்னேற அரசு அதிகாரிகளும் மக்களும் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியின்றி இலங்கை முன்னேற முடியாது” என்றும் அமைச்சர் சப்ரி குறிப்பிட்டார்.

பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த இலங்கையர்களுக்கிடையேயான ஒற்றுமை மற்றும் நட்புறவு குறித்து கருத்து வெளியிட்ட நீதியமைச்சர்; இந்த முறையைத் தொடருமாறு அதிகாரிகளை வலியுறுத்தினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்