அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் நெற் செய்கைக் காணிகளை குத்தகைக்கு வழங்குவதில் மோசடியா?: ஏலம் விடுவதற்கு முன்னர் உழவியது யார்?

🕔 September 6, 2021

– அஹமட் –

ட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலுக்குச் சொந்தமான நெற்செய்கைக் காணிகளை மோசடியான முறையில் சிலருக்கு குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அறியக் கிடைக்கிறது.

பெரிய பள்ளிவாசலுக்குச் சொந்தமான அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அமைந்துள்ள ‘கடைச்சிர புட்டி’ மற்றும் ‘வண்ணாமடு’ காணிகளே இவ்வாறு மோசடியான முறையில் சிலருக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

பள்ளிவாசலுக்குச் சொந்தமான நெற் செய்கைக் காணிகள் குத்தகைக்காக – ஏலம் (Auction) விடப்படும் போது, அதிக தொகை பணம் வழங்க முன்வருகின்றவர்களுக்கே, குறித்த காணிகள் வழங்கப்படுவதே முறையான நடவடிக்கையாகும்.

ஆனால், ‘கடைச்சிர புட்டி’ மற்றும் ‘வண்ணாமடு’ காணிகள் குத்தகைக்காக ஏலமிடப்படுவதற்கு முன்னராகவே, அங்கு தனி நபர்கள் சிலரால் உழவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

பள்ளிவாசலுக்குச் சொந்தமான காணிகள் குத்தகைக்கு வழங்கப்படுவதற்கு முன்னராக, அங்கு உழவு நடவடிக்கை நடைபெற்றுள்ளமை குறித்து, பள்ளிவாசல் நிருவாகத்தினருக்கு பொதுமக்கள் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அறிய முடிகிறது.

அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலுக்குச் சொந்தமான நெற் காணிகளை ஏலமிடும் நடவடிக்கை நாளை நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்