அவசரகால ஒழுங்கு விதிகள் பிரேரணை; நாடாளுமன்றில் நிறைவேற்றம்

🕔 September 6, 2021

த்தியாவசிய உணவு பொருள் விநியோகத்துக்காக ஜனாதிபதியால் வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால ஒழுங்கு விதிகள் தொடர்பான பிரேரணை 81 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரேரணைக்கு ஆதரவாக 132 வாக்குகளும் எதிராக 51 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி என்பன பிரேரணைக்கு எதிராக வாக்களித்துள்ளன.

அத்தியாவசிய உணவு பொருள் விநியோகத்துக்கான அவசரகால நிலை ஒக்டோபர் 31 நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பிரகடனப்படுத்தப்பட்டது. இதற்கான வர்த்தமானி அறிவிப்பு செப்டம்பர் 01ஆம் தேதி வெளியிடப்பட்டது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் உத்தரவிற்கு அமைய, இந்த அவசரகால விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன.

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 2வது சரத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், அத்தியாவசிய உணவு விநியோகத்துடன், தொடர்புப்பட்ட அவரகால விதிமுறைகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் பிரகடனப்படுத்தப்பட்டன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்