கொவிட் சடலங்களை அடக்கம் செய்ய, மேலும் மூன்று இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

🕔 August 30, 2021

கொவிட் சடலங்களை அடக்கம் செய்ய திருகோணமலை, புத்தளம் மற்றும் அம்பாறை மாவட்டங்களில் மேலும் மூன்று இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சின் கொவிட்-19 ஒருங்கிணைப்பாளர் மற்றும் தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பிலுள்ள ஓட்டமாவாடி – மஜ்மா நகரில் கொவிட் பிரேதங்களை அடக்கம் செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த வாரம் மேலும் இரண்டு ஏக்கர் நிலத்தைச் சேர்த்து , அந்த இடம் விரிவுபடுத்தப்பட்டது.

பிரேதங்களை அடக்குவதற்கான மூன்று புதிய இடங்கள் குறித்து அறிவதற்காக தொழில்நுட்பக் குழு ஆய்வு நடத்தி வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

இதுவரை 2264 கொவிட் பிரேதங்கள் ஓட்டமாவாடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. அங்கு அடக்கம் செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள் (2070) ஆவர்.

மேலும் ஓட்டமாவடியில் 98 இந்துக்கள், 55 பௌத்தர்கள் மற்றும் 41 கத்தோலிக்கர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

Comments

புதிது பேஸ்புக் பக்கம்