ஆப்கானிஸ்தான் கிறிக்கட் சபையின் பதில் தலைவராக ஃபஸ்லி நியமனம்: தலிபான்களுடனான சந்திப்பை அடுத்து தீர்மானம்

🕔 August 23, 2021

ப்கானிஸ்தான் கிறிக்கட் சபையின் பதில் தலைவராக அஸிசுல்லா ஃபஸ்லி நியமிக்கப்பட்டுள்ளார் என, கிறிக்கட் சபையின் ‘ட்விட்டர்’ பக்கத்தில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஸிசுல்லா ஃபஸ்லி – ஆப்கான் கிறிக்கட் சபையின் தலைவராக 2018 செப்டம்பர் தொடக்கம் 2019 ஜுலை வரையில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை தலிபான்களுக்கும் ஆப்கானிஸ்தான் கிறிக்கட் சபையினருக்கும் இடையில் சந்திப்பொன்று நடந்த பின்னர், அச்சபையின் பதில் தலைவராக அஸிசுல்லா ஃபஸ்லி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் கிறிக்கட்டுடன் ஃபஸ்லி இரண்டு தசாப்தங்களாக தொடர்புபட்டவர் என்பதோடு, ஆப்கானிஸ்தானில் கிறிக்கட் விளையாட்டை நிறுவிய வீரர்கள் குழுவில் ஒருவருமாவார்.

Comments