அம்பாறை மாவட்டத்தில் கடமையாற்றும் நிர்வாக சேவை அதிகாரிகள் ஐவருக்கு இடமாற்றம்

🕔 August 22, 2021

ம்பாறை மாவட்டத்தில் கடமையாற்றும் இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள் சிலருக்கு, எதிர்வரும் 25 ஆம் திகதி தொடக்கம், இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு – இந்த இடமாற்றங்களை வழங்கியுள்ளது.

அதனடிப்படையில்,

1. லகுகல பிரதேச செயலாளர் சந்தரூபன் அனுருத்த – அம்பாறை பிரதேச செயலாளராகவும்,

2. அம்பாறை பிரதேச செயலாளர் எம்.எஸ். என்.சொய்ஸா சிறிவர்தன – அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகவும்,

3. அம்பாறை மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் ஏ.எம்.லத்தீப் – நிந்தவூர் பிரதேச செயலாளராகவும்,

4. நிந்தவூர் பிரதேச செயலாளர் அஷ்ஷேக் ரீ.எம்.எம். அன்ஷார் (நளீமி) – அக்கரைப்பற்று பிரதேச செயலாளராகவும்,

5. அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் அஷ்ஷேக் எம்.எஸ்.எம். றஸான் இறக்காமம் பிரதேச செயலாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறு இடமாற்றப்படுகின்றவர்களில் ஒருவர் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் சில காலங்களுக்கு முன்னர் உதவிப் பிரதேச செயலாளராகக் கடமையாற்றியபோது, ஒலுவிலில் அமைந்துள்ள காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணியை சட்ட விரோதமாக அபகரித்துக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் இவ்வாறு காணியை சட்ட விரோதமாக அபகரித்தமை தொடர்பில் லஞ்ச, ஊழல்களை விசாரிக்கும் ஆணைக்குழு, ஜனாதிபதி புலனாய்வு பிரிவு உள்ளிட்ட பல இடங்களுக்கு அப்போது முறையிடப்பட்டிருந்தது.

இவரின் இந்த மோசடி அம்பலமானமையை அடுத்து இவர் அட்டாளைச்சேனையிலிருந்து இடமாற்றலாகிச் சென்றிருந்தார்.

தொடர்பான செய்திகள்:

01) ஒலுவில் அரச காணியை அபகரித்த அதிகாரிகள்; மீள வழங்காமல் ஏமாற்றி வருவதாக மக்கள் விசனம்

02) ஒலுவிலில் காணிகளை அபகரித்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதென தீர்மானம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்