41 கிலோகிராம் ஹெரோயின் இன்று காலை சிக்கியது: சந்தேக நபர் துபாயில் உள்ளார் எனத் தகவல்

🕔 July 30, 2021

பெருந்தொகையான ஹெரோயின் போதைப் பொருள் இன்று வெள்ளிக்கிழமை காலை பண்டாரகம பிரதேசத்தில் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் பின்னணியில் இலங்கையிலிருந்து துபாய்க்கு தப்பிச் சென்ற நபர் ஒருவர் உள்ளார் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தகவல் ஒன்றின் அடிப்படையில் பண்டாரகம – ரெணுகாவ பகுதியில் களுத்துறை பொலிஸார் இன்று காலை மேற்கொண்ட நடவடிக்கையின்போது, 41 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

துபாயைத் தளமாகக் கொண்டு போதைப்பொருள் வியாபாரம் நடத்தி வரும் இலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவரே, கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப் பொருளுடன் தொடர்புபட்டுள்ளார் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப் பொருளின் பெறுமதி 400 மில்லியன் ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறத.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்