தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் நாஜிமுக்கு பாராட்டு விழா

🕔 July 25, 2021

– நூருல் ஹுதா உமர் –

தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து மிகவிரைவில் விடைபெறவுள்ள உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிமுக்கான சேவைநலன் பாராட்டும், கௌரவிப்பும் இன்று ஞாயிற்றுக்கிழமை பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பேரவை மற்றும் பல்கலைக்கழக சமூகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில்

பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் எம்.சி.எம். நவாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், உபவேந்தர் எம்.எம்.எம். நாஜிம் தொடர்பிலான சிறப்புரையை அரசறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் எம்.எம். பாஸில் நிகழ்த்தினார்.

பேரவை உறுப்பினர் பேராசிரியர் கெலின் என். பீரிஸ், பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் சலித்த பெனாரகம ஆகியோரும் நிகழ்வில் உரையாற்றினர்.

இந்நிகழ்வில் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிமை பாராட்டி பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் கலாநிதி அன்வர் எம் முஸ்தபா, வவுனியா மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபரும் பேரவை உறுப்பினருமான ஐ.எம். ஹனிபா மற்றும் பேராசிரியர் ரமீஸ் அப்துல்லா ஆகியோர் பொன்னாடை போத்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்தார்கள்.

இந்த நிகழ்வில் புதிய உபவேந்தராக நியமனம் பெற்றுள்ள பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், பீடாதிபதிகள், பதிவாளர், பேராசிரியர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், உதவி பதிவாளர்கள் மற்றும் நூலகர்கள் உட்பட கல்வி மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்