தலைப்புச் செய்திகள்

கெப்பிட்டல் மகாராஜா கூட்டு நிறுவனங்களின் தலைவர் காலமானார்

கெப்பிட்டல் மகாராஜா கூட்டு நிறுவனங்களின் தலைவர் ஆர். ராஜா மகேந்திரன் இன்று காலமானார்.

சுகயீனம் காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மரணமானார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவர் கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் ஸ்தாபகர் சின்னத்தம்பி ராஜேந்திரம் என்பவரின் புதல்வராவார்.

சிரச தொலைக்காட்சி – வானொலி, சக்தி தொலைக்காட்சி – வானொலி, நியுஸ் பெஸ்ட், ரிவி1 தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்கள் கெப்பிட்டல் மகா ராஜாவின் கீழ் உள்ள சில நிறுவனங்களாகும்.

இவரின் மறைவுக்கு இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயம் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.