போதைப் பொருள் வியாபாரி உள்டோர், ராணுவத்தினரின் சுற்றி வளைப்பில் நிந்தவூரில் கைது

🕔 July 24, 2021

– பாறுக் ஷிஹான் –

போதைப் பொருள் வியாபாரி ஒருவர் உட்பட நால்வர் ராணுவத்தினரின் சுற்றி வளைப்பில் நிந்தவூர் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டனர்.

சம்மாந்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு போதைப்பொருள் வியாபாரிகளை கைது செய்வதற்காக ராணுவத்தினரால் இந்த சுற்றி வளைப்பை மேற்கொண்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் சம்மாந்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

நிந்தவூர் ராணுவ முகாம் பொறுப்பதிகாரி தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் மேற்படித நால்வரும் சுமார் 275 மில்லிகிராம் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டதாக சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரே இரவில் நிந்தவூர் ராணுவ முகாம் பொறுப்பதிகாரி தலைமையிலான ராணுவத்தினர் அடுத்தடுத்து மேற்கொண்ட இரண்டு சுற்றிவளைப்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களிடமிருந்து 1135 மில்லிகிராம் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

தொடர்பான செய்தி: போதைப் பொருளுடன் தொடர்புடையோர் ஜனாஸாக்களை, முஸ்லிம் மையவாடிகளில் அடக்க அனுமதிப்பதில்லை: நிந்தவூர் பெரிய பள்ளிவாசல் அதிரடித் தீர்மானம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்