கொவிட் தடுப்பூசிகளுக்காக 1500 கோடி ரூபாவுக்கும் மேல் செலவு: தகவல் வெளியிட்டார் அமைச்சர் சன்ன ஜயசுமன்ன

🕔 July 25, 2021

லங்கைக்கு 1 கோடியே 21 இலட்சத்து 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட கொவிட் தடுப்பூசிகள் இதுவரையில் கிடைக்கப்பெற்றுள்ளதாக ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அவற்றுள் நூற்றுக்கு 72 சதவீதமானவை அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்டவை என்றும் அவர் கூறியுள்ளார்.

அதனடிப்படையில் 80 லட்சம் சினோபார்ம், 05 லட்சம் எக்ஸ்டரா செனகா, 180,000 ஸ்புட்னிக் V மற்றும் 115,830 பைஸர் தடுப்பூசிகளை அரசாங்கம் கொள்வனவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்காக இலங்கை ரூபாவில் 1,546 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

எதிர்காலத்தில் சீனாவிடம் இருந்து 16 லட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் அன்பளிப்பாக கிடைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்