எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை: ரணிலின் திருத்தத்தை சபாநாயகர் நிராகரித்தார்

🕔 July 20, 2021

ரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க நேற்று முன்வைத்திருந்த திருத்தம் ஏற்றுக்கொள்ள முடியாததொன்று என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அதனை நிராகரித்துள்ளார்.

இன்றைய தினம் நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஆரம்பமாகிய வேளையில் சபாநாயகர் இதனை அறிவித்திருந்தார்.

இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை, அமைச்சரவைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணையாக கருதவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த திருத்தத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை இரண்டாவது நாளாக இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளருது.

இது தொடர்பான வாக்கெடுப்பும் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்