ஈரான் ஜனாதிபதி தேர்தலில், நீதிபதி இப்ராஹிம் ரய்சி வெற்றி

🕔 June 19, 2021

ரான் ஜனாதிபதி தேர்தலில் இப்றாஹிம் ரய்சி (Ebrahim Raisi) வெற்றி பெற்றுள்ளார்.

ஈரானின் உச்ச நீதிபதியும் போட்டியிட்ட 04 வேட்பாளர்களில் ஒருவருமான இப்ராஹீம் ரய்சி 62 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஈரான் ஜனாாதிபதி தேர்தலில் போட்டியிடுதற்ககு பலருக்கு தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடும் போக்காளரும் பழைமைவாதியும் எனக் கூறப்படும் ரய்சி, அரசியல் கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதில் தொடர்புடையவர். அமெரிக்க அரசு – தடை விதித்தவர்களில் ஒருவராவார்.

ஈரானில் அதி உயர் தலைவருக்கு அடுத்தபடியாக, இராண்டாவது பெரிய அதிகாரம் மிக்க பதவியாக ஜனாதிபதி பதவி உள்ளது.

உள்நாட்டுக் கொள்கைகள், வெளியுறவு போன்றவற்றில் ஜனாதிபதிக்கு முக்கியமான செல்வாக்கு உண்டு. ஆனால், அரசு தொடர்புடைய எல்லா விவகாரங்களிலும் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி கொமேனிக்கே உண்டு.

தொடர்புடைய கட்டுரை: ‘வளைகுடா வீரன்’ ஜனாதிபதித் தேர்தல்: சொல்லப் போகும் சேதியென்ன?

Comments

புதிது பேஸ்புக் பக்கம்