ஐ.தே.கட்சியின் தேசியப்பட்டில் உறுப்புரிமைக்கு ரணில் பெயரிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பு

🕔 June 16, 2021

க்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு, அந்தக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பெயரிடப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இன்று அக் கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பான ஆவணங்களை, இன்று காலை தேர்தல்கள் ஆணைக்குழுவில் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார கையளித்துள்ளார்.

கடந்த மாதம் இடம்பெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில், தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு, கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சிக்கு, நாடுமுழுதுவம் 249,435 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

எந்தவொரு மாவட்டத்திலும் ஆசனம் எதுவும் கிடைக்கப்பெறாத நிலையில், பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகளின் அடிப்படையில், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரேயொரு தேசியப் பட்டியல் உறுப்புரிமை கிடைத்தது.

இந்நிலையில், 09 மாதங்களுக்குப் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்புரிமை நிரப்பப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்