வரவு – செலவுத் திட்டத்துக்கு சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கும்

🕔 November 23, 2015
Duminda dissanayake - 01ரவு – செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழு தீர்மானித்துள்ளதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எனினும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் எதனையும் கூறமுடியாது எனவும் அவர் கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கட்கிழமை மாலை சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பு குறித்து வினவிய போதே துமிந்த திஸாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்