எல்லை நிர்ணயம் தொடர்பில் மேன்முறையீடு செய்வதற்கான காலம் நீடிப்பு

மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் விசேட வேண்டுகோளுக்கிணங்கவே, இக்கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
எல்லை நிர்ணயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண நியமிக்கப்பட்டுள்ள ஐவரடங்கிய குழுவிடம் இது தொடர்பான முறைபாடுகளையும் யோசனைகளையும் நொவம்பர் மாதம் 20ஆம் திகதி வரை சமர்ப்பிக்கலாம் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், மக்களும் அரசியல் கட்சிகளும் விடுத்த வேண்டுகோளுக்கணங்கவே இக்கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பைஸர் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார்.
இக்குழு, தனது அறிக்கையை 2016, ஜனவரி மாதம் 15ஆம் திகதியளவில் அமைச்சரிடம் சமர்பிக்கும். அதன் பின்னர், எல்லை நிர்ணயம் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக மீண்டும் மக்களுக்கு அமைச்சர் தெளிவுபடுத்தவுள்ளார்.