கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவருக்கு பிணை

🕔 November 23, 2015

Courts order - 01– எப். முபாரக் –

ஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கிண்ணியா பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட இளைஞன் ஒருவரை, ஒரு லட்சம் ரூபாய் பிணையில் செல்வதற்கு, திருகோணமலை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எம். முஹீத், இன்று  திங்கட்கிழமை  உத்தரவிட்டுள்ளார்.

2.1 கிராம் கஞ்சாவினை தன்வசம் வைத்திருந்த, கிண்ணியா 06 ஆம் வட்டாரத்தினைச் சேர்ந்த மேற்படி இளைஞர் சீனன்குடா பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று  நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.

இதேவேளை, குறித்த இளைஞனை, எதிர்வரும் 26ஆம் திகதி  மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் இன்றை தினம் நீதவான் உத்தரவிட்டார்.

பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்து, சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய மேற்படி இளைஞரை சோதனைக்குட்படுத்திய போது, அவரிடமிருந்து குறித்தளவு கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Comments