ரவியின் தேநீர் விருந்தை, புறக்கணித்தார் மஹிந்த

🕔 November 20, 2015
Mahinda Rajapaksa - 054ரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டமையினை அடுத்து, நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வு நிறைவில் வழங்கப்பட்ட தேநீர் விருந்தில் கலந்து கொள்ளாமல் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புறக்கணித்தார்.

வரவு – செலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் போது, நிதியமைச்சின் சார்பில் தேநீர் விருந்தொன்று வழங்கப்படுவது வழக்கமாகும். இந்த தேநீர் விருந்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும்.

இந்த வழக்கத்தின் பிரகாரம், நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் இன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்த தேநீர் விருந்துபசாரத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்து வைத்தார்.

எனினும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச ஆகியோர் மேற்படி தேநீர் விருந்தில் கலந்து கொள்ளால் புறக்கணித்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியமைச்சின் தேநீர் விருந்தில் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்