ஜுலை வரை ஹரின் கைது செய்யப்பட மாட்டார்: உச்ச நீதிமன்றுக்கு சட்ட மா அதிபர் அறிவிப்பு

🕔 April 30, 2021

க்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெனாண்டோ எதிர்வரும் ஜூலை 14ம் திகதி வரையில் கைது செய்யப்பட மாட்டார் என சட்ட மா அதிபர் அறிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றுக்கு, சட்ட மா அதிபர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் அடிப்படையில் ஹரின் கைது செய்யப்பட மாட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் தின தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தம்மை கைது செய்ய முயற்சிக்கப்படுவதாகவும் அதனை தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்குமாறும் கோரி, ஹரின் பெனாண்டோ சட்டத்தரணிகள் ஊடாக நேற்றைய தினம் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான பரிசீலனையின் போது, சட்ட மா அதிபர் நீதிமன்றில் இந்த விடயத்தை இன்று குறிப்பிட்டுள்ளார்.

சட்ட மா அதிபரின் சார்பில் சிரேஸ்ட சொலிசிட்டர் ஜெனரல் பிரியந்த நவான உச்ச நீதிமன்றில் இந்த தகவலை வெளியிட்டார்.

Comments