சந்தையில் சமையல் எரிவாயு சிலின்டர்கள் இல்லையா; 1997 க்கு அறிவியுங்கள்

🕔 April 30, 2021

12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தையில் கொள்வனவு செய்ய முடியாத நிலை இருக்குமாயின், அதுதொடர்பாக தொலைபேசியின் மூலம் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு பொதுமக்கள் தெரியப்படுத்த முடியும் என, அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதற்கான தொலைபேசி இலக்கம் 1997 ஆகும்.

சமையல் எரிவாயு சிலிண்டர்களை தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்கு லிட்ரோ கேஸ் இலங்கை நிறுவனம் உடன்பட்டிருப்பதாக கூட்டுறவுச் சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது

12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை ரூபா 1,493 ஆகும். இந்த விலைக்கு சந்தையில் சிலிண்டரை கொள்வனவு செய்ய முடியும் எனவும் ராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

Comments