ஆசாத் சாலி ஈஸ்டர் தின தாக்குதலுடன் தொடர்புடையவர், அதனால்தான் கைது செய்தோம்: அமைச்சர் சரத் வீரசேகர

🕔 March 17, 2021

முன்னாள் ஆளுநர் அசாத் சாலி – ஈஸ்டர் தின தாக்குதலுடன் தொடர்புடையவர் என்பதாலேயே, அவரைக் கைது செய்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கொலன்னாவை பிரதேச சபையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுகக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைகக் கூறினார்.

“மாவனெல்லை புத்தர் சிலை உடைப்புடனும், வேறு சில செயற்பாடுகளுடனும் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆசாத் சாலி தொடர்புடையவர் என்ற விடயம் தெரியவந்தமையினாலேயே அவரை கைது செய்தோம்.

மேலும், ஷரிஆ சட்டம் தொடர்பில் தெரிவித்த கருத்தொன்று தொடர்பிலும் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்தோம்.

தடுப்பு காவலில் வைத்து அவரை விசாரிக்கும் போது இந்த உண்மைகள் வெளிவரும்” எனவும் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இதேவேளை, ஆசாத் சாலியை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஆளுநர் அசாத் சாலி நேற்று மாலை கொள்ளுப்பிட்டியில் வைத்து குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவரை பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றத்திடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் அனுமதி கோரியிருந்த நிலையில், இன்று நீதிமன்றம் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்