ரத்த நிறத்தில் வெள்ளம்: இந்தோனேசியாவில் தவிக்கும் கிராம மக்கள்

🕔 February 7, 2021

ந்தோனேசியாவிலுள்ள ஒரு கிராமத்தில், ரத்தச் சிவப்பு நிறத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஆடை தயாரிப்பு தொழிற்சாலையில் வெள்ளம் புகுந்துவிட்டதால் வெள்ள நீர் இவ்வாறு நிறம் மாறியுள்ளது.

மத்திய ஜாவா தீவில் ஜெங்கோட் என்கிற இடத்தில் நேற்று சனிக்கிழமை இவ்வாறு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ள நீரில் ‘க்ரிம்சன்’ என்ற சிவப்பு நிறச் சாயம் கலந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

பெகலோங்கன் நகரத்தின் தெற்குப் பகுதி, இந்தோனேசியாவின் பாரம்பரியமிக்க முறையில், ஆடைகளில் மெழுகிட்டு அதன் மூலம் ஆடைகளில் சாயமிடுவதற்கு மிகவும் பெயர் பெற்ற இடங்களில் ஒன்றாக விளங்குகிறது.

ஒட்டுமொத்த கிராமத்தையும் சூழ்ந்துள்ள இந்த ரத்தச் சிவப்பு நிற நீரை படமெடுத்து ஆயிரக்கணக்கானோர் சமூக வலைதளங்களில் பதிவிட்டார்கள்.

“ஆடைகள் மீது ‘பற்றிக்’ என்கிற பாரம்பரியமுறையில் முறையில் சாயமிடும் தொற்சாலையில் இருக்கும் சாயங்கள் வெள்ள நீரில் கலந்ததால்தான் வெள்ளம் இப்படி நிறம் மாறியிருக்கிறது. மீண்டும் மழை நீருடன் சேரும் போது இந்த வண்ணம் காணாமல் போகும்” என அங்குள்ளவர்கள் கூறுகின்றனர்.

பெகலோங்கனில் இருக்கும் நதிகள், இதற்கு முன்பும் இந்த பற்றிக் தொழிற்சாலை சாயங்களால் நிறம் மாறியிருக்கின்றன. கடந்த மாதம் வேறு ஒரு கிராமத்தில் வெள்ளம் பச்சை நிறத்துக்கு மாறியது.

இந்தோனேசியாவில் சமீபத்தில்தான் ஒரு விமான விபத்து நடந்தது. அதனைத் தொடர்ந்து மழை வெள்ளம், எரிமலை வெடிப்பு என பல்வேறு மோசமான சம்பவங்கள் நடந்தன. இப்போது மீண்டும் மழை பொழிந்து வெள்ள நீர் ரத்தச் சிவப்பு நிறத்தில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்