கொரோனா பாணி மருந்து ஏன் பலிக்கவில்லை: நாட்டு வைத்தியர் தம்மிக பண்டார காரணம் சொல்கிறார்

🕔 January 23, 2021

கொரோனாவுக்கு எதிரான தனது மருந்தினை பயன்படுத்தியவர்கள் மாமிசம் உண்டதாலும் மது அருந்தியதாலும், அந்த மருந்து பலிக்கவில்லை என நாட்டு வைத்தியர் தம்மிக பண்டார தெரிவித்துள்ளார்.

சமூகஊடகங்களில் வெளியிட்டுள்ள வீடியோவொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

குறிப்பிட்ட வீடியோவில் தனது மருந்தினை பயன்படுத்தியவர்களுக்கு ஏன் உரிய பலன்கிடைக்காமல் போனது என்பதற்கான விளக்கத்தினை அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒருவர் மது அருந்தினாலோ, சிகரெட் பயன்படுத்தினாலோ அல்லது மாமிசம் உட்கொண்டாலோ தனது மருந்து பலனளிக்காது என, அவர் கூறியுள்ளார்.

இது குறித்து முன்னரே தான் அவர்களுக்குத் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

ராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த மற்றும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிராச்சி ஆகியோர் தம்மிக பண்டாரவின் பாணி மருந்தை அருந்திய போதிலும், அவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

Comments