சுகாதார அமைச்சர் பவித்ராவுக்கு கொரோனா தொற்று: தம்மிக்கவின் ‘பாணி’ குடித்தும் பலனில்லை

🕔 January 23, 2021

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி கொவிட் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக பிபிசி சிங்கள சேவை தெரிவித்துள்ளது.

“சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி மேற்கொண்ட அன்ரிஜன் பரிசோதனையைத் தொடர்ந்து கொவிட் தொற்றுக்குள்ளாகியமை தெரியவந்துள்ளதாகவும், அவர் பி.சி.ஆர் முடிவுகளுக்காக காத்திருக்கிறார் எனவும் பிபிசி சிங்கள செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆயினும் இந்த விவகாரம் குறித்து, சுகாதார அமைச்சு இதுவரை எந்த கருத்துக்களையும் வெளியிடவில்லை.

கேகாலையைச் சேர்ந்த நாட்டு வைத்தியர் தம்மிக்க பண்டார என்பவர், கொவிட் தொற்றுக்கு எதிரானது எனக்கூறித் தயாரித்த பாணி மருந்தை அருந்தியவர்களில் பவித்ரா வன்னியாராச்சியும் ஒருவர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஏற்கனவே அமைச்சர் வாசுதேவ நாணயகார, ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, பியல் நிஷாந்த மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் ஆகியோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்