அனைத்து இளைஞர், யுவதிகளுக்கும் ராணுவப் பயிற்சி வழங்கத் திட்டம்:அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு

🕔 January 18, 2021

தினெட்டு வயதுக்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு ராணுவப் பயிற்சி வழங்கும் திட்டமொன்று குறித்து பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நாட்டின் நலனுக்காக இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி வழக்கும் இந்தத் திட்டம் நாடாளுமன்றில் முன்மொழியப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒழுக்கமான, சட்டத்தை மதிக்கும் சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் இந்த திட்டத்தை முன்வைக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மற்ற நல்ல குணங்களுக்கிடையில் தலைமைத்துவ திறன்களை இத்திட்டத்தின் மூலம் உருவாக்க முடியும் என்றும், இது தொடர்பில் பயப்படத் தேவையில்லை எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Comments